காளான் மசாலா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 200 கிராம்
2. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
3. கிராம்பு - 4 எண்ணம்
4. பெரியவெங்காயம்-2 எண்ணம்
5. தக்காளி-2 எண்ணம்
6. ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி
7. சீரகம் - 1 தேக்கரண்டி
8. இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
9. மல்லித் தழை - 1 தேக்கரண்டி
10. மஞ்சள் பொடி-1/2 தேக்கரண்டி
11. பட்டை-1 துண்டு
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. காளானைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். மிளகாயைக் கீறி வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், பட்டை, கிராம்பு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பொன் நிறத்துக்கு வந்ததும், சிறிது தண்ணீர் சேர்த்து ஏலம், மஞ்சள் பொடி, இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
5. கலவை சிறிது கெட்டியானதும், சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய காளானை அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. கடைசியாக மல்லித் தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.