காலிப்ளவர் மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காலிஃப்ளவர் – 1 சிறியது
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
3. தக்காளி – 4 எண்ணம்
4. எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
5. உப்பு – தேவையான அளவு
அரைக்க
6. இஞ்சி – 1 துண்டு
7. பூண்டு – 6 பல்
8. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
9. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
10. கசகசா – 2 தேக்கரண்டி
11. மிளகு – 1 தேக்கரண்டி
12. சீரகம் – 1/2 தேக்கரண்டி
13. முந்திரிப்பருப்பு – 8 எண்ணம்
தாளிக்க
14. பட்டை – ஒரு துண்டு
15. சீரகம் – 1/2 தேக்கரண்டி.
செய்முறை:
1. காலிபிளவரை சிறு சிறு பூக்களாகப் பிரித்தெடுத்துக் கொள்ளவும்.
2. கொதிக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து, காலிப்ளவர் பூக்களை சேர்த்து 20 நிமிடங்கள் வைத்து, தண்ணீரை வடித்து விடவும்.
3. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, சீரகம், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கிக் கொள்ளவும்.
6. பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
7. அதனுடன் காலிப்ளவர், அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
8. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
9. கடைசியாக மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.