முட்டைக் கோஸ் கூட்டு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கடலைப்பருப்பு - அரை கப்
2. முட்டை கோஸ் - கால் கிலோ
3. பெரிய வெங்காயம் - 1
4. தக்காளி - 1
5. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
1. கடுகு - 1/2 தேக்கரண்டி
2. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
3. பூண்டு - 2 பல்
4. கறிவேப்பிலை - சிறிது
5. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, முட்டைக் கோஸைப் பொடியாக நறுக்கவும்.
2. கடலைப் பருப்பை அளவான தண்ணீரில் வேகவிடவும்.
3. வெந்த பருப்பில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மூட்டைக் கோஸைச் சேர்த்து அதனுடன் மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.
4. நன்றாக வெந்த பின்பு இறக்கி, அதில் தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.
5. எண்ணெயைக் காய வைத்துக் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு சேர்த்து தாளித்துச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.