முட்டைக்கோஸ் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பெரிய முட்டைக்கோஸ்- 1 எண்ணம்
2. தேங்காய்- 2 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
4. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
5. நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
6. கடுகு- 1 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
8. பச்சைமிளகாய்- 2 எண்ணம்
9. கறிவேப்பிலை- சிறிது.
செய்முறை:
1. முட்டைக் கோஸைப் பொடியாக நறுக்கித் தண்ணீரில் அலசி வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், தாளிசப் பொருட்களைப் போட்டு வதக்கவும்.
3. நறுக்கி வைத்திருக்கும் கோஸைப் போட்டுச் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
4. அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் வாணலியை மூடி வைக்கவும்.
5. இடையிடையே திறந்து கிளறி விடவும்.
6. வெந்த பிறகு இறக்கி மேலாகத் தேங்காய்த் துருவலையும், கறிவேப்பிலையையும் போட்டு அலங்கரிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.