வெண்டைக்காய் வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் - 1/2 கிலோ
2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
3. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
4. மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
5. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
6. கடலைமாவு - 2 தேக்கரண்டி
7. எலுமிச்சம் பழம் - 1/2 பழம்
8. எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெண்டைக்காயைக் கழுவி விட்டு மேல் நுனிப் பகுதியை நறுக்கி விட்டு நீளமாகக் கீறி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்த் துண்டுகளைப் போட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து எலுமிச்சைச் சாறு பிழிந்து ஊற வைக்க வேண்டும்.
3. கடலை மாவை வெண்டைக்காய் கலவையில் தூவிப் பிசறி வைக்க வேண்டும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெண்டைக்காயை போட்டு மொறு மொறுப்பாக பொரித்து எடுக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.