வாழைத்தண்டு கூட்டு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வாழைத் தண்டு – 1/2 அடி நீளம்
2. பாசிப்பருப்பு – 200 கிராம்
3. பச்சை மிளகாய் – 5 எண்ணம்
4. மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
5. தக்காளி – 1 எண்ணம்
6. சின்ன வெங்காயம் – 100 கிராம்
7. பூண்டு – 5 பல்
8. சீரகம் – 1தேக்கரண்டி
9. பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
11. கடுகு - 1/4 தேக்கரண்டி
12. உளுந்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
13. தேங்காய் – ஒரு மூடியில் பாதி
14. எண்ணெய் – தேவையான அளவு
15. உப்பு – தேவையான அளவு
16. கறிவேப்பிலை - சிறிது
17. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
2. வாழைத்தண்டில் உள்ள மேல் பகுதிகளை அகற்றி, நடுவிலுள்ள தண்டை வட்ட வடிவமாக நறுக்கவும். நறுக்கும் போது நாரினை அகற்றிச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
3. ஒரு வாணலியில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணிர் ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் சிறிது சேர்த்து வேகவிடவும்.
4. பருப்பு சிறிது வெந்தததும், அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வேகவிடவும்.
5. அதனுடன் நறுக்கிய வாழைத்தண்டுத் துண்டுகளைப் போட்டு, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும்.
6. வாழைத் தண்டு நன்கு வெந்தததும், தேங்காய் துருவல் சேர்க்கவும்.
7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
8. தாளிசத்தை வாழைத்தண்டுக் கலவையில் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
9. கடைசியாக அதில் மல்லித் தழையினை தூவவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.