உருளைக்கிழங்கு வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சின்ன உருளைக் கிழங்கு – 1/2 கிலோ
2. வெங்காயம் – 100 கிராம்
3. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
4. மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
5. மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
6. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
9. கடலைப் பருப்பு – 1/2 தேக்கரண்டி
10. உப்பு – தேவையான அளவு
11. எண்ணெய் – தேவையான அளவு
12. கறிவேப்பிலை – சிறிது
13. மல்லித் தழை - சிறிது.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, போட்டு தாளித்துக் கொள்ளவும்.
3. அதில் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. அத்துடன் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கி, பின் உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும்.
5. அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அடிப்பிடித்து விடாமல், இடைவிடாது கிளறிக் கொண்டே இருக்கவும்.
7. கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.