புடலங்காய் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. புடலங்காய் - 1/2 கிலோ
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. கடுகு -1/2 தேக்கரண்டி
4. உளுந்து பருப்பு-1தேக்கரண்டி
5. மஞ்சள் தூள்- சிறிது
6. உப்பு - தேவையான அளவு
அரைக்க
7. பச்சைமிளகாய்-2 எண்ணம்
8. பூண்டு-2 பல்
9. சோம்பு-1/2 தேக்கரண்டி
10. சீரகம் - 1/2 தேக்கரண்டி
11. தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி.
செய்முறை:
1. புடலங்காயைத்தோலைச் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து போட்டுத் தாளித்து வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய புடலங்காய், தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறிவிட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கடாயை மூடி வேக வைக்கவும்.
4. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சொரசொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
5. புடலங்காய் வெந்ததும், அரைத்த கலவையைச் சேர்த்துக் கலந்து விடவும்.
6. காயிலுள்ள தண்ணீர் வற்றி, மசாலாவின் வாசனை அடங்கியதும் பொரியலை அடுப்பிலிருந்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.