பீட்ரூட் தொக்கு
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. பீட்ரூட் (நடுத்தரமானது) - 1 எண்ணம்
2. புளி - நெல்லிக்காய் அளவு
3. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
5. பெருங்காயம் - சிறிது
6. எண்ணெய் - தேவையான அளவு
7. கல் உப்பு - தேவையான அளவு
தாளிக்க
8. கடுகு - 1 தேக்கரண்டி
9. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
10. கறிவேப்பில்லை - சிறிது.
செய்முறை:
1. பீட்ருட்டைச் சுத்தம் செய்து, தோல் சீவித் துருவிக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பெருங்காயத்தைப் பொரித்துக் கொள்ளவும்.
3. பின்னர், புளியை இலேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
4. பீட்ருட்டை பச்சை வாசனை போக கல்உப்பு சேர்த்து வதக்கவும்.
5. நன்கு ஆறியவுடன், சிறிது தண்ணீர் சேர்த்து மூன்றையும் விழுதாக அரைக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டுத் தாளித்தவுடன், பீட்ரூட், அரைத்து வைத்த விழுது ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
7. அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
8. எல்லாம் சேர்ந்து வரும் போது, கடைசியில் எண்ணெய் பிரிந்து வரவும் இறக்கவும்.
குறிப்பு
1. பீட்ருட்டைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வதக்கினால் பச்சை வாசனை போகாது. எனவே அதைத் துருவித்தான் பயன்படுத்த வேண்டும்.
2. இந்தத் தொக்கை ப்ரிஜ்ஜில் வைத்துச் சில நாட்கள் பயன்படுத்தலாம்.
3. சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் நல்லெண்ண்ய் விட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.