புடலங்காய் தயிர் பச்சடி
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. புடலங்காய் - 2 சிறிய துண்டு
2. தயிர் - 1 கரண்டி
3. கடுகு - 1 தேக்கரண்டி
4. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
5. தேங்காய் (துருவியது) - 2 மேசைக்கரண்டி
6. மல்லித்தழை - சிறிது
7. எண்ணெய் - தேவையான அளவு
8. கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. புடலங்காயைச் சுத்தம் செய்து, அதைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. தேங்காய், மல்லித்தழை,பச்சைமிளகாய்,உப்பு போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த கலவையுடன், பச்சை புடலங்காய், தயிர் சேர்த்துக் கடுகு தாளித்து போடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.