பாகற்காய் மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாகற்காய் - 200 கிராம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
4. மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
7. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. பெரிய வெங்காயம் -1 எண்ணம்
10. கறிவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பாகற்காய், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
5. பிறகு அதனுடன் பாகற்காய்த் துண்டுகளைப் போட்டுக் கிளறி, அதனுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
6. கொதிக்க ஆரம்பித்ததும் மூடி போட்டு தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
7. தண்ணீர் நன்கு வற்றியதும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.