வெள்ளரிக்காய் கூட்டு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளரிக்காய் - 1 எண்ணம்
2. பாசிப்பருப்பு - 1/4 கப்
3. சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
6. எண்ணை - 1 தேக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. சிறிய வெங்காயம் - 2 எண்ணம்
9. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. வெள்ளரிக்காயைத் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
3. பருப்பு வெந்தவுடன், அதில் நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகளைப் போட்டு அதனுடன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து சில நிமிடம் வேக விடவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்தைக் வேகவைத்த காயுடன் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.