புளி மிளகாய் ஊறுகாய்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை மிளகாய் - 200 கிராம்
2. உப்பு - 200 கிராம்
3. புளி - 100 கிராம்
4. கடுகு - 50 கிராம்
5. எள் - 50 கிராம்
6. வெந்தயம் - 20 கிராம்
7. மஞ்சள் தூள் - 20 கிராம்
8. நல்லெண்ணெய் - 150 மி.லி.
செய்முறை:
1. பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. புளி மற்றும் உப்பை தண்ணீரில் ஊற வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் கடுகு, வெந்தயம், எள் போட்டு வறுத்துப் பொடிக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பச்சை மிளகாய்களைப் போட்டு நன்றாக வதக்கவும்.
5. அதன் பிறகு புளி, உப்பு ஊற வைத்ததைப் பிசைந்து வடிகட்டி அத்துடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
6. இந்தப் புளிக்கரைசலை பச்சை மிளகாயுடன் ஊற்றவும்.
7. புளிக் காய்ச்சல் போன்று எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை கொதிக்க வைத்துக் கீழே இறக்கி வைக்கவும்.
8. இதனுடன் பொடித்து வைத்திருக்கும் கடுகு, எள், வெந்தயப் பொடியைக் கலக்கவும்.
9. கண்ணாடி அல்லது சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட ஜாடிகளில் போட்டு ஆறிய பின்பு மூடி வைக்கவும்.
குறிப்பு: இது தயிர் சாதம், இட்லி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.