மாங்காய் ஊறுகாய்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் – 4 எண்ணம்
2. மிளகாய்த்தூள் – 100 கிராம்
3. பெருங்காயம் – 1 துண்டு
4. வெந்தயம் – 1 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
6. கடுகு – 1 தேக்கரண்டி
7. எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
8. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. மாங்காயைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
2. வாணலியில் பெருங்காயம், வெந்தயம் இரண்டையும் போட்டு வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகைப் போட்டுத் தாளித்து மாங்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.
4. மாங்காய் நன்றாக வதங்கி வெந்ததும், மிளகாய்த்தூள், உப்பு, பொடித்து வைத்த பெருங்காயம், வெந்தயத்தைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.