இஞ்சிப் புளி ஊறுகாய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. இஞ்சி – 25 கிராம்
2. புளி – சிறு எலுமிச்சம் பழ அளவு
3. வெல்லம் – ஒரு சிறு துண்டு
4. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
6. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
8. நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
9. கடுகு – 1/2 தேக்கரண்டி
10. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. இஞ்சியை நன்றாகக் கழுவி, தோலைச் சீவிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. புளியை ஊற வைத்துக் கரைத்துப் புளிக்கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. பின்னர் அதில் புளிக்கரைசலைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. புளிக்கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும், நெருப்பைக் குறைத்து மிதமான நெருப்பில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.
6. மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் வெல்லத்தைச் சேர்த்து கெட்டிக் குழம்பு போல் ஆகும் வரை கொதிக்க விடவும்.
7. கடைசியில் வெந்தயப் பொடியைத் தூவிக் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.