கொய்யா ஊறுகாய்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கொய்யாக்காய்த் துண்டுகள் -1கோப்பை
2. வெந்தயம் - 1 தேக்கரண்டி
3. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
4. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
5. நல்லெண்ணெய் - தேவையான அளவு
6. பெருங்காயத்தூள் - சிறிது.
செய்முறை:
1. கொய்யாக்காய்த் துண்டுகளின் விதைகளை நீக்கிச் சதைப்பகுதியாக வைக்கவும்.
2. வெந்தயத்தைச் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
4. அத்துடன் கொய்யாக்காய்த் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் வெந்தயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.