பூண்டு ஊறுகாய்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பூண்டு - 300 கிராம்
2. மிளகாய்த்தூள் - 3/4 கப்
3. வெந்தயம் - 1/2 மேசைக்கரண்டி
4. சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
5. மல்லி - 1/2 மேசைக்கரண்டி
6. கடுகு - 1/2 மேசைக்கரண்டி
7. எலுமிச்சை ரசம் - 1 கப்
8. எண்ணெய் - 1 கப்
9. பெருங்காயம் - சிறிது
10. உப்பு - 1/2 கப்
11. மஞ்சள் தூள் - சிட்டிகை.
செய்முறை:
1. ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் மல்லி, சீரகம், வெந்தயம் தனித்தனியாக வறுத்து ஆறியதும் கொஞ்சம் நர நரவென பொடித்து வைத்துக் கொள்ளவும்.
2. பூண்டை சுடுநீரில் போட்டுத் தண்ணீரை வடித்தெடுக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
4. அதனுடன் பூண்டு சேர்த்து நன்கு கலந்ததும், காரத்தூள், உப்பு, பொடித்து வைத்திருக்கும் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
5. அதில் எலுமிச்சைச் சாறினை ஊற்றிக் கிளறவும்.
6. சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்தவுடன், கரண்டி மூலம் காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.