மீன் ஊறுகாய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மீன் (முள் நீக்கியது) - 1கிலோ கிராம்
2. இஞ்சி - 125 கிராம்
3. பூண்டு - 125 கிராம்
4. கடுகு - 60 கிராம்
5. சர்க்கரை - 1 கோப்பை
6. வினிகர் - 400 கிராம்
7. மிளகாய் வற்றல் - 60 கிராம்
8. சீரகம் - 35 கிராம்
9. உப்பு - தேவையான அளவு
10. ந. எண்ணெய் - 500 கிராம்
11. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1.மீனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2. உப்பு, மிளகாய்த்தூள் போன்றவை கலந்து மீன் துண்டுகளின் இருபுறமும் அதைத் தடவி ஊற வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாகவும் அதில் மீன் துண்டுகளைப் பொறித்தெடுக்கவும்.
4. இஞ்சி, பூண்டு, மிளகாய் வற்றல், சீரகம், கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. எண்ணெய்யைச் சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக்கவும்.
6. மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை அத்துடன் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.