இறால் மசாலா ஊறுகாய்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. இறால் (சிறிது) - 300 கிராம்
2. நல்லெண்ணெய் - 1/2 கப்
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. வெந்தயம் - 3 தேக்கரண்டி
6. பூண்டு - 3 தேக்கரண்டி
7. இஞ்சி (நறுக்கியது) - 3 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
9. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
11. சர்க்கரை - 1 தேக்கரண்டி
12. வினிகர் - 2 கப்
13. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. இறாலை நன்கு சுத்தம் செய்து, 1 தேக்கரண்டி வினிகர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
2. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி வதக்கிய இறாலைப் போட்டுப் பொறித்தெடுக்கவும்.
3. வெந்தயத்தைச் சிறிதளவு வினிகரில் ஊறவைத்து, அதனுடன் கடுகு, சீரகம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. இந்தக் கலவையை அரைக்கும் போது தண்ணீருக்குப் பதிலாக வினிகரைப் பயன்படுத்தவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கறிவேப்பிலை, அரைத்த மசாலா, உப்பு, சிறிதளவு வினிகர், பொறித்தெடுத்த இறால் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
6. மசாலாக் கலவை நன்றாக வதங்கிக் கெட்டிப்பட்டதும் அடுப்பிலிருந்து இறக்கி இறுதியாக சர்க்கரை சேர்க்கவும்
குறிப்பு: இறால் மசாலா ஊறுகாய் ஆறிய பிறகு, அதனை ஈரமில்லாத பாட்டில்களில் அடைத்துச் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.