பச்சை மிளகாய் ஊறுகாய்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சை மிளகாய் – 250 கிராம்
2. எலுமிச்சைச் சாறு – 1/2 கப்
3. உப்பு – 3 தேக்கரண்டி
4. வினிகர் – 2 மேசைக்கரண்டி
மசாலாவுக்கு
5. கடுகு – 2 மேசைக்கரண்டி
6. சோம்பு - 2 மேசைக்கரண்டி
7. வெந்தயம் – 1 தேக்கரண்டி
8. மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி
9. பெருங்காயம் - 1 தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
11. மிளகு - 8 எண்ணம்
12. எண்ணெய் 1/4 கப்.
செய்முறை:
1. பச்சை மிளகாயை நன்கு கழுவி அதன் தண்டினை நீக்கி, அதனை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கி ஏதாவது ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைத்து மூடி ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.
3. மறுநாள் கடுகு, வெந்தயம், சோம்பு போன்றவற்றை தனித்தனியாக வறுத்து அவற்றைப் பொடித்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் மிளகு சேர்த்து இலேசாக வதக்கி இறக்கவும்.
5. வதக்கிய மிளகுடன் பெருங்காயம் சேர்த்து சிறிது நேரம் ஆற வைக்கவும்.
6. பின்பு அதனுடன் மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் தாளித்த எண்ணெய் சேர்த்து ஊறுகாயில் விட்டுக் கலக்கி வைக்கவும்.
குறிப்பு:பின்பு அதனை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.