காய்கறி ஊறுகாய்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கேரட் – 1/2 கப்
2. பாகற்காய் – 1/4 கப்
3. பீன்ஸ் – 1/4 கப்
4. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
5. பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
6. பஜ்ஜி மிளகாய் – 1/4 கப்
7. பச்சை மிளகாய் – 100 கிராம்
8. பெங்களூர் கத்திரிக்காய் – 1/4 கப்
9. மிளகாய் வற்றல் – 100 கிராம்
10. எலுமிச்சைச் சாறு – 1/4 கப்
11. வினிகர் – 1/4 கப்
12. வெந்தயம் – 1 தேக்கரண்டி
13. கடுகு – 1 தேக்கரண்டி
14. எண்ணெய் - தேவையான அளவு
15. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. மிளகாய் வற்றல், கடுகு இரண்டையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
2. வெந்தயத்தை வறுத்து வைக்கவும்.
3. நறுக்கிய காய்கறிகளுடன் பொடித்த கடுகு, பொடித்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைப் பெரிய பாட்டிலில் சேர்த்து நன்கு குலுக்கிக் கலந்து கொள்ளவும்.
4. பிறகு அவற்றுடன் எலுமிச்சம் பழச் சாறு, வினிகர் விட்டுக் கலந்து கொள்ளவும்.
5. பின்னர் பெருங்காயத்தூள், எண்ணெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
6. காய்கறிகள் அந்தக் கலவையில் நன்கு கலக்கும் வரை ஊறவிட்டு, பிறகு ஊறுகாயைப் ருசிக்கலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.