இஞ்சிப் புளி தொக்கு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. இஞ்சி - 50 கிராம்
2. புளி - நெல்லிக்காய் அளவு
3. வெல்லம் - சிறிய துண்டு
4. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - சிறிது
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சை மிளகாய், சுத்தம் செய்த இஞ்சியைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றிப் புளியை நன்கு ஊற வைக்கவும்.
3. வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி போட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
4. மிக்சி ஜாரில் வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
5. வதக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கரைத்த புளி, உப்பு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுக்கவும்.
6. இறுதியில் கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயம் போட்டுத் தாளித்ததும், அதனுடன் அரைத்த விழுது, பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கெட்டியாக வதங்கியபின் இறக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.