காய்கறி ஊறுகாய்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காய்கறிகள் (பீன்ஸ், கேரட், குடமிளகாய், பட்டாணி, பட்டர் பீன்ஸ் கலவை - பொடியாக நறுக்கியது) - 2 கப்
2. உருளைக்கிழங்கு - 1 எண்ணம்
3. நல்லெண்ணெய் - 100 கிராம்
4. உப்பு - 1 மேசைக்கரண்டி
5. கடுகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
6. வெந்தயப்பொடி - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 50 கிராம்
9. வினிகர் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. பொடியாக நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்து ஈரம் போக உலர விடவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் உலர்ந்த காய்கறிக் கலவை, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
3. காய்கறி வதங்கி வரும் போது கடுகுத்தூள், வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
4. பின் அதில் வினிகர் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு:
1. காய்கறி ஊறுகாயை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது என்பதால், குறைந்த அளவே செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.