நார்த்தங்காய் ஊறுகாய்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. நார்த்தங்காய் (நடுத்தரம்) - 1 எண்ணம்
2. மிளகாய்த்தூள் - 4 மேசைக்கரண்டி
3. பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
4. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
5. கடுகுப் பொடி - 1 தேக்கரண்டி
6. நல்லெண்ணெய் - 1/2 கப்
7. உப்பு - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. நார்த்தங்காயை சுத்தம் செய்து, விதைகளை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
2. அப்படியே 4 அல்லது 5 நாட்கள் வரை வைத்திருக்கவும்.
3. அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத் தூள், கடுகுப்பொடி சேர்த்துக் கலக்கவும்.
4. வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, நாரத்தங்காய் துண்டுகளின் மேல் ஊற்றி நன்கு கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.