புளி மிளகாய்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சை மிளகாய் - 100 கிராம்
2. புளி - எலுமிச்சை அளவு
3. வெந்தயப் பொடி - 1 தேக்கரண்டி
4. கடுகு - 1 தேக்கரண்டி
5. நல்லெண்ணெய் - 100 கிராம்
6. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
8. உப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
9. வெல்லம் - சிறிய துண்டு
செய்முறை:
1. பச்சை மிளகாயைச் சுத்தம் செய்து, காம்பை எடுத்துத் தனியாக வைக்கவும்.
2. புளியைக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயந்ததும், அதில் கடுகு, பெருங்காயம் தாளித்து, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. கரைத்த புளி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
5. நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது, வெந்தயப் பொடி, வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.