மாங்காய் இனிப்பு ஊறுகாய்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் - 1 எண்ணம்
2. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
3. பெருங்காயத்தூள் - 1/4 மேசைக்கரண்டி
4. வெந்தயத்தூள் - 1/2 மேசைக்கரண்டி
5. அச்சு வெல்லம் - 1 எண்ணம்
6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
7. நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
8. கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. மாங்காயை நன்றாகக் கழுவி, துடைத்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்க விடவும்.
3. அச்சுவெல்லம் கரைந்ததும் வடி கட்டித் தனியே வைக்கவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு போட்டு, வெடித்தவுடன் மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
5. மாங்காய்த் துண்டுகள் வெந்ததும் மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
6. இறுதியில் வடி கட்டி வைத்துள்ள அச்சு வெல்லத்தண்ணீரை ஊற்றி நன்றாகக் கிளறவும்.
7. அச்சுவெல்லத் தண்ணீர் கெட்டியானதும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
8. நன்கு ஆறியவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு:
ஊறுகாயைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து உபயோகித்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.