மாங்காய் ஊறுகாய்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. 1. மாங்காய் - 1/2 கிலோ
2. வெந்தயம் - 1 தேக்கரண்டி
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
6. பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
8. எண்ணெய் - 50 மில்லி
9. புளி - எலுமிச்சை அளவு
10. எலுமிச்சை - 1 எண்ணம்
11. இஞ்சி - சிறிது
12. கருவேப்பில்லை - சிறிது
செய்முறை:
1. மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. புளியைச் சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும்.
3. வாணலியில் தேவையான உப்பு, மஞ்சள் போட்டு மெதுவான சூட்டில் வதக்கவும்.
4. மூன்றையும் மிக்சியில் போட்டு தேவையான அளவில் பசையாகச் செய்து கொள்ளவும்.
5. வெந்தயம், சீரகம், கடுகு, மிளகாய் வற்றலை வாணலியில் போட்டு வதக்கவும்.
6. வதக்கிய பொருட்களை சிறிது ஆற வைத்து, மிக்சியில் பொடியாக அடித்து வைக்கவும்.
7. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம், கடுகு, வெந்தயம் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கி, அதனுடன் இஞ்சி, பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும்.
8. அதனுடன் கரைத்து வைத்த புளித் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
9. அதனுடன் மேலே தயாரித்து வைத்த பசையை சேர்த்துக் கிளறவும்.
10. சிறிது நேரம் மெல்லிய தீயில் வதக்கி, அதனுடன் அரைத்து வைத்த பொடி. எலுமிச்சைச் சாற் சேர்க்கவும்
குறிப்பு:
பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் அடைப்பதற்கு முன்பு முன் இரண்டு நாட்கள் காற்றோட்டமாக வைக்கவும்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|