உப்பு மாங்காய்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. கிளி மூக்கு (கல்லா) மாங்காய் – 5 எண்ணம்
2. கல் உப்பு – தேவையான அளவு
3. மஞ்சள்தூள் – 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. மாங்காயைக் கழுவி, நீளவாக்கில் கொட்டையைத் தவிர்த்து இருபுறமும் பக்கவாட்டில் முக்கால் பாகம் வரை நறுக்கவும்.
2. கல் உப்பு, மஞ்சள்தூள் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
3. உப்புக் கலவையை நறுக்கிய மாங்காயில் நங்கு அடைத்து வைக்கவும்.
4. அப்படியே அனைத்து மாங்காயிலும் செய்த பின் பீங்கான் ஜாடி அல்லது பானையில் வைத்து மெல்லிய துணியால் மூடி வைக்கவும்.
5. மறுநாள் மாங்காய் நன்கு ஊறி நீர் விட்டிருக்கும்.
6. தனியாக மாங்காயினை மட்டும் தட்டில் வைத்து வெயிலில் காய வைக்கவும்.
7. மாங்காய் ஊறவைத்த பானையும் நீரோடு, துணியால் மூடி வெயிலில் வைக்கவும்.
8. மாலையில் திரும்ப மாங்காயினை பானையில் போட்டு எடுத்து வைக்கவும்.
9. இதே போல் நீர் வற்றும் வரை செய்த பின் மாங்காய் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.
10. அதனை மீண்டும் நன்கு காயவைத்து எடுத்துப் பத்திரபடுத்தவும்.
குறிப்புகள்:
1. உப்பு மாங்காயை வத்தல் குழம்பில் வத்தல் போன்று பயன்படுத்தலாம்.
2. உப்பு மாங்காயைக் கொண்டு மோர்க் குழம்பும் செய்யலாம்.
3. உப்பு மாங்காயைத் தனியாகவும் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.