இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. இஞ்சி - 100 கிராம்
2. நெல்லிக்காய் – 100 கிராம்
3. பூண்டு – 50 கிராம்
4. வெல்லம் – சிறிது
5. மிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி
7. வெந்தயம் (வறுத்துப் பொடித்தது) - 1/4 தேக்கரண்டி
8. நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. நெல்லிக்காயை வேகவைத்து, விதையினை நீக்கி மசித்து வைக்கவும்.
2. இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக் கொள்ளவும்.
3. வணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு விழுது, வேகவைத்து மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
4. நன்கு வதங்கியதும் காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்தவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.