இனிப்பு மாங்காய் ஊறுகாய்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் (பொடியாக நறுக்கியது) - 2 கோப்பை
2. சர்க்கரை - 2 கோப்பை
3. மிளகாய்த்தூள் - 4 கரண்டி
4. சீரகம் (எண்ணெய் சேர்க்காமல் வறுத்தது) - 4 கரண்டி
5. கசகசாத் தூள் - 2 கரண்டி
6. உப்பு - 2 கரண்டி
செய்முறை:
1. மாங்காயைத் துருவிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம், கடுகு தாளித்து, பின்னர் அதோடு துருவிய மாங்காயைச் சேர்த்து, நன்கு வதக்கிக் கொள்ளவும்.
3. பின்பு, மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு, வறுத்த சீரகத்தூள் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.
4. சர்க்கரையுடன் மாங்காய் கலந்து பாகு பதத்தில் இறக்கவும்.
குறிப்பு:
இனிப்பு மாங்காய் ஊறுகாயைச் சப்பாத்தி, பூரி ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|