ஆவக்காய் ஊறுகாய்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. ஆவக்காய் மாங்காய் - 1 எண்ணம்
2. கடுகு - 1 தேக்கரண்டி
3. வெந்தயம் - 1 தேக்கரண்டி
4. கல் உப்பு - 3 தேக்கரண்டி
5. நல்லெண்ணெய் - 50 மி.லி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
செய்முறை:
1. மாங்காயை பால் நீங்கும் அளவிற்கு கழுவி, கொட்டை மற்றும் ஓட்டிலுள்ள தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெயிலில் ஒரு நாள் காய வைக்கவும்.
3. கடுகு, வெந்தயம், கல் உப்பு மூன்றையும் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
4. நன்கு காய்ந்த கண்ணாடி அல்லது பீங்கான் ஜாரில் காய்ந்த மாங்காயை நிரப்பி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
5. அரைத்தப் பொடியைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து, காற்று போகக்கூடிய மெல்லிய துணியினால் மூடி 2 நாள் வெயிலில் காய வைக்கவும்.
7. நான்கு நாட்கள் வெளியே வைத்து நன்கு ஊறிய பின்னர் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.
குறிப்பு: வெளியே வைக்கும் 4 நாட்களுக்கும், தினமும் ஒரு முறை காய்ந்த கரண்டியினால் நன்கு கலந்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.