மா இஞ்சி ஊறுகாய்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் - 3/4 கோப்பை
2. இஞ்சி - 1 கோப்பை
3. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
4. எலுமிச்சம்பழம் - 1 எண்ணம்
5. கடுகு - 1 எண்ணம்
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணய் - தேவையான அளவு
செய்முறை:
1. மாங்காய் மற்றும் இஞ்சியை நன்றாகச் சுத்தம் செய்து, தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. பச்சை மிளகாயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்து, அதில் மாங்காய் இஞ்சித் துண்டுகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
4. எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்து நன்றாகக் கலக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகைப் போட்டுத் தாளித்து, அதில் மாங்காய் இஞ்சிக் கலவையைச் சேர்த்து கிளறவும்.
6. முப்பது நிமிடங்கள் வரை நன்றாகக் கிளறிய பின்னர் இறக்கி, ஆறிய பின்பு பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|