களாக்காய் ஊறுகாய்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. களாக்காய் - 100 கிராம்
2. வெந்தயம் - 1 தேக்கரண்டி
3. கடுகு - 1 தேக்கரண்டி
4. மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
5. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
6. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. களாக்காயைக் கழுவி, கொட்டையை நீக்கி, நறுக்கி உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
2. வெறும் கடாயில் வெந்தயம், கடுகைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பொரிந்ததும், களாக்காயில் கொட்டிக் கலக்கவும்.
4. வறுத்துப் பொடித்த வெந்தயம், கடுகைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி இறக்கவும்.
5. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நன்றாகக் கலந்து விடவும். ஒரே வாரத்தில் நன்றாக ஊறி, ஊறுகாய் தயாராகிவிடும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.