கோஸ் ஊறுகாய்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கோஸ் (துருவியது) - 1 கோப்பை
2. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
3. புளி - 1 நெல்லிக்காய் அளவு
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
8. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
11. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வெறும் கடாயில் 1/4 தேக்கரண்டி கடுகு, வெந்தயம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும்.
2. கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்தது, அதில் துருவிய கோஸைப் போட்டு பச்சை வாசனைப் போக வதக்கி ஆற வைக்கவும்.
3. ஆறியதும் அதனுடன் புளி, உப்பு, பொடித்த பொடி சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும்.
4. பின் கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு உளுந்து போட்டுத் தாளித்து,அதில் கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும்.
5. அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
6. அத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுது சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.