மாங்காய் ஊறுகாய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் (பெரியது) - 2 எண்ணம்.
2. உப்பு - 2 கப்.
3. மிளகாய்த்தூள் - 1 1/2 கப்
4. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி.
5. வெந்தயத்தூள் - 1 தேக்கரண்டி (வெந்தயத்தை எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து பொடிக்க வேண்டும்)
6. கடுகுத்தூள் - 1 தேக்கரண்டி.
7. கடுகு - சிறிது.
8. நல்லெண்ணெய் - 2 கப்.
9. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. மாங்காயை கழுவி உலர்த்தி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. மாங்காய் துண்டுகளை உப்பு கலந்து மூடி வைக்கவும்.
3. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் கை படாமல் கலக்கி விடவும்.
4. ஐந்து நாட்களுக்குப் பின்பு மிளகாய்த்தூளை ஊறிய மாங்காயுடன் கலக்கவும்.
5. கடாயில் நல்லெண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், கடுகுத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் மாங்காயும் சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.