பூண்டு ஊறுகாய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பூண்டு - 250 கிராம்
2. வெந்தையம் - 1/2 தேக்கரண்டி
3. சீரகம் - 1/2 தேக்கரண்டி
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 7 எண்ணம்
6. கருவேப்பில்லை - 10 இலைகள்
7. எண்ணெய் - 30 மில்லி
8. இஞ்சி - சிறிது
9. பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
10. புளிக் கரைசல் - 2 தேக்கரண்டி
11. எலுமிச்சை சாறு - 1/4 தேக்கரண்டி
12. மஞ்சள் பொடி - 10 கிராம்
13. உப்பு - தேவையான அளவு.
முன் தயாரிப்புகள்:
பூண்டு அரைத்தல்:
1. பூண்டின் தோலை உரித்துப் பின்னர் அதை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உரித்து வெட்டிய பூண்டு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு மெதுவான சூட்டில் வதக்கவும்.
3. வதக்கிய பூண்டினை தேவையான அளவில் பசை போல் அரைத்துக் கொள்ளவும்.
ஊறுகாய் மசாலா அரைத்தல்
1. வாணலியில் வெந்தயம், சீரகம், கடுகு, மிளகாய் வற்றல் போன்றவற்றைப் போட்டு வதக்கவும்.
2. அதைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.
2. சீரகம், கடுகு, வெந்தயம் மற்றும் கருவேப்பில்லை போட்டுத் தாளிக்கவும்.
3. அதனுடன் இஞ்சி, பெருங்காயத்தூளைச் சேர்க்கவும்.
4. இதில் புளிக்கரைசலை ஊற்றிச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. கொதிக்கும் போது முன்பே தயாரித்து வைத்திருக்கும் பூண்டுப் பசையைச் சேர்க்கவும்.
6. குறைந்த நெருப்பில் சிறிது வேக விடவும்.
7. பின்னர், அதில் வெந்தயம், சீரகம், கடுகு மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கொள்ளவும்.
8. கடைசியாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.