வெங்காய ஊறுகாய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சின்ன வெங்காயம் -1/4 கிலோ
2. புளி - 100 கிராம் (புதிய புளியாக இருப்பது நல்லது)
3. வெந்தயம் -1/4 கரண்டி
4. புதிய மிளகாய்த்தூள் -100 கிராம்
5. வெல்லம் அல்லது சர்க்கரைத்தூள் - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
7. மஞ்சள் தூள் - சிறிது
8. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
9. நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வெந்தயம், பெருங்காயத்தை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
2. புளியை நீரில் ஊற வைத்துக் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயத்தை வதக்கி கொள்ளவும்.
4. வதங்கிய வெங்காயம் ஆறிய பின் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
5. கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கரண்டி எண்ணெய் விட்டுக் கடுகு, தாளித்து மஞ்சள்தூள் சேர்த்து அரைத்துள்ள விழுதை அதில் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
6. அதில் சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்துக் கிளற வேண்டும்.
7. நிறம் மாறியவுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், வெல்லம் போன்றவைகளை அதில் சேர்த்துக் கிளறிச் சுண்டிய பின்பு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.