பூண்டு ஊறுகாய்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உரித்த பூண்டு - 300 கிராம்
2. மிளகாய்த்தூள் - 3/4 கிண்ணம்
3. உப்பு - 1/2 கிண்ணம்
4. எலுமிச்சை ரசம் - 1 கிண்ணம்
5. எண்ணெய் - 1 கிண்ணம்
6. பெருங்காயம் - சிறிது
7. கடுகு - 1/2 கரண்டி
8. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
9. வெந்தயம் - 1/2 கரண்டி
10. சீரகம் - 1/2 கரண்டி
11. தனியா - 1/2 கரண்டி.
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய்யில்லாமல் தனியா, சீரகம், வெந்தயம் தனித்தனியாக வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.
2. பூண்டைத் தண்ணீர் விடாமல் இலேசாக வதக்கி எடுக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
4. அத்துடன் பூண்டு சேர்த்து நன்கு கலந்ததும், காரத்தூள், உப்பு, பொடித்து வைத்திருக்கும் பொடி போன்றவைகளைச் சேர்த்து உடன் அடுப்பை அணைத்து விடவும்.
5. நன்கு கிளறிவிட்டு அதில் எலுமிச்சை ரசத்தை ஊற்றி கிளறவும்.
6. மிகக் கெட்டியாக இருக்கும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்து விடும்.
7. காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் 4 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.