காளான் ஊறுகாய்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பட்டன் காளான் – 500 கிராம்
2. மிளகு – 1/2 தேக்கரண்டி
3. கடுகு – 1/2 தேக்கரண்டி
4. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
5. வினிகர் – 100 மிலி
6. தண்ணீர் – 250 மிலி
7. உப்பு – 1 மேசைக்கரண்டி
8. சர்க்கரை – 1 தேக்கரண்டி.
செய்முறை:
1. காளானைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சுடுநீரில் போட்டுச் சுத்தம் செய்யவும்.
2. சுத்தம் செய்த காளான்களைத் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
3. தண்ணீரை வடிகட்டிச் சூடு ஆறிய பின்பு கண்ணாடி/பிளாஸ்டிக் பாட்டிலில் போடவும்.
4. தண்ணீர், வினிகர், உப்பு, சர்க்கரை மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
5. கொதிக்க வைத்தது குளிர்ந்த பின்பு பாட்டிலிலுள்ள காளானில் சேர்க்கவும்.
6. பின்னர் அத்துடன் கடுகு, வெந்தயத்தை வாணலியில் இலேசாக வறுத்துச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.