வாழைப்பூ வடகம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பூ மடல்கள் – 4 எண்ணம்
2. உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
3. கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
4. காய்ந்த மிளகாய் – 2 என்ணம்
5. பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும்.
2. பருப்பு வகைகளை ஊற வைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் கொர்கொரப்பாக அரைக்கவும்.
3. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, அரைத்து வைத்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.
4. பின்னர், சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தி வைக்கவும்.
குறிப்பு:
இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.