ஜவ்வரிசி - தக்காளி வடகம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஜவ்வரிசி- 1 கிலோ
2. பச்சை மிளகாய்- 150 கிராம்
3. தக்காளி பழம்- 100 கிராம்
4. உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சுட வைத்து அதில் தக்காளிப் பழத்தைச் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
2. பின்னர் குளிந்த நீரில் தக்காளியைப் போட்டு, தக்காளித் தோலை அகற்றி விடவும்.
3. தோல் அகற்றிய தக்காளிப் பழத்தை நன்றாகப் பிழிந்து சாற்றை மெல்லிய துணியில் விதைகளில்லாதபடி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
4. ஜவ்வரிசியுடன் தண்ணீரைச் சேர்த்துக் காய்ச்சி கூழ் பக்குவத்துக்குக் கொண்டு வர வேண்டும்.
5. ஜவ்வரிசிக் கூழுடன் பச்சை மிளகாயை அரைத்துச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. அதன் பிறகு, அதில் வடிகட்டி வைத்திருக்கும் தக்காளிச் சாறு உப்பு சேர்த்து இறக்கி ஆறவிட வேண்டும்.
7. ஒரு சுத்தமான துணியை வெயிலில் விரித்துப் போட்டு வடகக் கூழை சிறிய கரண்டியால் எடுத்து வட்ட வட்டமாக துணியில் ஊற்றிக் காய வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.