வெல்லப் புட்டு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு - 1 கப்
2. வெல்லம் - 1/2 கப்
3. தேங்காய் - சிறிது
4. ஏலக்காய் - 2 எண்ணம்
5. நெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை:
1. முதலில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டி வெல்லப்பாகாகக் காய்த்து வைத்துக் கொள்ளவும்.
2. அரிசி மாவில் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும்.
3. இட்லி பாத்திரத்தில் அந்த மாவை வைத்து பத்து நிமிடம் வரை வேக வைக்கவும்.
4. புட்டு வெந்தவுடன் வெல்லப்பாகு, நெய், ஏலக்காய், தேங்காய் சேர்த்து நன்கு கிளறிப் பின்னர் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.