புழுங்கலரிசிப் புட்டு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. புழுங்கலரிசி - 2 கப்
2. வெல்லம் - 1 1/2 கப்
3. தேங்காய்த் துருவல் - 1/2 கப்
4. கடலைப்பருப்பு - 1/4 கப்
5. முந்திரிப்பருப்பு - 1/4 கப்
6. ஏலக்காய்த்தூள் - சிறிது
7. நெய் - 1 மேசைக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
2. கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும்.
3. ஒரு கப் அரிசி மாவுக்கு ஒரு கப் என்ற அளவில் நீரை எடுத்துக் கொதிக்க வைத்து, மாவைச் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
4. மாவு வெந்ததும் வேக வைத்தக் கடலைப்பருப்பைச் சேர்க்கவும்.
5. வெல்லத்தைப் பாகு வைத்து (மிகவும் கெட்டியாக இல்லாத பதத்தில்) மாவுடன் சேர்க்கவும்.
6. நெய்யில் முந்திரிப்பரூபு, தேங்காய்த்துருவலை வறுத்து அதனுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாக வரும் வரையில் கிளறவும்.
7. வெண்ணெய் போல் திரண்டு வரும் போது, தட்டில் போட்டு துண்டுகளாக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.