புரோட்டா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மைதா – 500 கிராம்
2. முட்டை – 2 எண்ணம்
3. பால் – 100 மில்லி
4. சோடா உப்பு – 1 சிட்டிகை
5. சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
6. நல்லெண்ணெய் – 200 மில்லி
7. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்துக் கொள்ளவும்.
2. அதனுடன் பால், உப்பு, சோடா உப்பு, மைதா, எண்ணெய் ஒரு மேஜைக் கரண்டி ஆகியவை சேர்த்து நன்றாக அடித்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
3. தனியே ஒரு பாத்திரத்தில் மீதி உள்ள எண்ணெயை ஊற்றி, உருட்டி வைத்துள்ள மாவு உருண்டைகளை அதில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் எண்ணெயில் ஊறவைக்கவும்.
4. பின்னர் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, லேசாக கையால் தட்டி, பிறகு மெல்லியதாக விசிறிக் கொண்டு, வட்டமாக சுருட்டிக் கொள்ளவும்.
5. சுருட்டிய மாவை எடுத்து கைகளால் தட்டி தோசைக்கல்லில் இடவும்.
6. ஊற வைக்க பயன்படுத்திய எண்ணெய் சிறிது ஊற்றி, அதிகம் தீயவிடாமல் இருபக்கமும் திருப்பிப் போட்டு, நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.(விருதுநகர், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் புரோட்டாவை எண்ணெய்யில் பொறித்து எடுக்கிறார்கள்)
குறிப்பு: முட்டை பயன்படுத்த விரும்பாதவர்கள் அதற்குப் பதில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.