செட்டிநாட்டுத் தேன் குழல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கிலோ
2. உளுத்தம் பருப்பு - 300 கிராம்
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. எண்ணெய் - 500 கிராம்
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பச்சரிசியைக் தண்ணீரில் நன்றாகக் கழுவி வடிகட்டி நிழலில் காய வைக்கவும்.
2. உளுத்தம் பருப்பை இலேசாகப் பொன்னிறமாக வாணலியில் வறுத்து எடுக்கவும்.
3. அரிசி, உளுந்தைச் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு அகலமான பாத்திரத்தில் மாவுடன் உப்பு, சீரகம், போட்டுச் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகும் வரை நன்றாகப் பிசையவும்.
5. மாவைச் சிறிதாக உருட்டித் தேன் குழல் கட்டையில் வைக்கவும்.
6. அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தேன் குழல் கட்டையில் இருந்து மாவை வட்டமாகப் பிழியவும்.
7. இருபுறம் புரட்டி வெந்தவுடன் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.