சேனைக்கிழங்கு வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சேனைகிழங்கு - 500 கிராம்
2. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
3. கடலைமாவு - 1 தேக்கரண்டி
4. சோளமாவு - 1 தேக்கரண்டி
5. எண்ணெய் - 200 மி.லி.
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. கடுகு - 1 தேக்கரண்டி
9. கருவேப்பிலை - சிறிது
10. மிளகாய் - 4 எண்ணம்
செய்முறை:
1. சேனைக்கிழங்கைத் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. குக்கரில் தேவையான அளவிற்குத் தண்ணீர் ஊற்றி சேனைக்கிழங்கை 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
3. சேனைக்கிழங்கை ஆற வைத்து, மேற்புறத் தோலைச் சீவி எடுத்துச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
5. நறுக்கி வைத்திருக்கும் சேனைக்கிழங்கை இந்தக் கலவையில் போட்டு நன்றாகப் பிரட்டிக் கொள்ளவும்.
6. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
7. தாளிசத்துடன் கலந்து வைத்திருக்கும் சேனைக்கிழங்கைப் போட்டு வறுத்து எடுக்கவும்.
8. வறுத்த சேனைக்கிழங்கை இறக்கி, மல்லித்தழையைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.