மரவள்ளிக் கிழங்கு மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம்
2. மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
7. எண்ணெய் - தேவையான அளவு
8. கறிவேப்பிலை - சிறிது
9. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. மரவள்ளிக் கிழங்கைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கி, அதனைச் சுத்தமாகத் தண்ணீரில் கழுவி வைக்கவும்.
2. மரவள்ளிக் கிழங்குத் துண்டுகளை நன்கு வேக வைத்து எடுக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் சேர்த்து பொரிந்ததும் தாளிக்கவும்.
4. அந்தத் தாளிசத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. அத்துடன் வேக வைத்த மரவள்ளிக் கிழங்கைச் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
குறிப்பு:
* மரவள்ளி கிழங்கு மசாலாவை ஒரு காலை அல்லது மாலை நேர உணவாகவும் உண்ண மிகவும் சுவையாக இருக்கும்.
* ரசம் சாப்பாட்டிற்குத் துணை உணவாகவும் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.