மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. மரவள்ளிக் கிழங்கு - 250 கிராம்
2. எண்ணெய் - 1/2 லிட்டர்
3. மிளகாய்த்தூள் - தேவையான அளவு
4. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் மரவள்ளிக் கிழங்கைத் தோல் நீக்கிக் கொள்ளவும்.
2. ஏதேனும் சீவலில் வடிவத்திற்கு ஏற்றவாறு சீவிக் கொள்ள வேண்டும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீவலை எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
4. பொரித்த கிழங்குச் சீவலில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.