உப்புக் கொழுகட்டை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி – 300 கிராம்
2. கடலை பருப்பு – 50 கிராம்
3. தேங்காய் – 50 கிராம் (சிறு பற்களாக நறுக்கவும்)
4. கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி
5. மிளகாய் வற்றல் – 5 எண்ணம்
6. கடுகு, உளுந்து - சிறிது
7. எண்ணெய் -சிறிது
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. அரிசி, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாகத் தண்ணீரில் குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
2. கடலைப் பருப்பை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரிசியை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த பருப்புடன் அரைத்த அரிசியையும் சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.
5. ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு உளுந்து போட்டுத் தாளிக்கவும்.
6. அத்துடன் மிளகாய் வற்றல், கடலை பருப்பு, தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
7. அந்தக் கலவை நன்றாக வதங்கியதும் அதில் அரிசி, பருப்புக் கலவையைக் கொட்டிக் கெட்டியாகும்வரை கிளறவும்.
8. கெட்டியான மாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
9. மாவு ஆறிய பிறகு, சிறு உருண்டைகளாக (சிலர் நீளமாக உருட்டுவதும் உண்டு) உருட்டி வைக்கவும்.
10. ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி அதில் கொழுக்கட்டைகளைப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: உப்புக் கொழுக்கட்டை சாப்பிட தேங்காய்த் துண்டுகளை இடையிடையே சேர்த்துச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.