காய்கறிக் கொழுக்கட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு - 1 கப்
2. முட்டைகோஸ் துருவல் - 1/4 கப்
3. கேரட் துருவல் - 1/4 கப்
4. மல்லித்தழை - 1/4 கப்
5. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
6. இஞ்சி (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
7. பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் தண்ணீர், உப்பு சேர்த்து, கொஞ்சம் விட்டு கொதிக்கவிடவும்.
2. அதில் அரிசி மாவு சேர்த்துக் கட்டி பிடித்து விடாமல் கெட்டியாகக் கிளறி ஆற வைக்கவும்.
3. கடாயில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முட்டைக்கோஸ் துருவல், கேரட் துருவல், மல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கிளறவும்.
4. கடைசியாக மிளகுத்தூள் கலந்து இறக்கவும்.
5. அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டிக் கிண்ணம் போல் செய்து அதில் காய்கறிக் கலவையை வைத்து மூடவும்.
6. அவையனைத்தையும் இட்லிச்சட்டியில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.